Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வேட்பு மனுக்களை ஏற்றுக் கொள்ளும் பணி ஆரம்பம்!

March 12, 2020
in News, Politics, World
0
வேட்பு மனுக்களை ஏற்றுக் கொள்ளும் பணி ஆரம்பம்!

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக் கொள்ளும் பணி இன்று(வியாழக்கிழமை) முதல் ஆரம்பமாகவுள்ளது.

இன்று காலை 8.30 முதல் மாலை 4.15 வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்ய முடியும்.

அத்துடன், வார இறுதி நாட்களில் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எதிர்வரும் 19ஆம் திகதி நண்பகல் 12.30 வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தபால்மூல வாக்களிப்பு எதிர்வரும் 8ஆம், 9ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

இம்மாதம் 16ஆம் திகதி வரை தபால்மூல வாக்களிப்பிற்காக விண்ணப்பிக்க முடியும்.

இதேவேளை தேர்தலுக்கான பொலிஸ் பாதுகாப்பு வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்களுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் சகல இடங்களிலும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

19ஆம் திகதிக்கு பின்னரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய குழு கூட்டம் இன்று

Next Post

16ஆம் திகதி வரை தபால்மூல வாக்களிப்பிற்காக விண்ணப்பிக்க முடியும்

Next Post

16ஆம் திகதி வரை தபால்மூல வாக்களிப்பிற்காக விண்ணப்பிக்க முடியும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures