நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று(திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது.
குறித்த தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 7 ஏழு கட்டங்களாக நடைப்பெறவுள்ளது. இந்நிலையில் 91 தொகுதிகளுக்கான வாக்கு பதிவுகள் அடுத்த மாதம் 11 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இதன்படி ஆந்திரா ,அருணாசல பிரதேசம், அசாம், பீகார்,சத்தீஷ்கார்,காஷ்மீர், மராட்டியம்,மணிப்பூர்,மேகாலயா,மிசோரம்,நாகாலாந்து, ஒடிசா, சிக்கிம்,தெலுங்கானா, திரிபுரா,உத்தரபிரதேசம் ,உத்தரகாண்ட் ,மேற்கு வங்காளம் ,அந்தமான், லட்சத்தீவு ,ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய தொகுதிகள் அடங்கலாக இத்தேர்தல் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று ஆரம்பிக்கப்படுவதுடன், எதிர்வரும் 28 ஆம் திகதி வேட்பு மனுக்களை திரும்பபெறுவதற்கான கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தேர்தலுக்கான முதற்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், குறித்த தொகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.