Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வெள்ள நிவாரணத்துக்கு ஆர்வம் காட்டியதால் அரிசி, மளிகை, போர்வை விற்பனை அமோகம்

August 30, 2018
in News, Politics, World
0

கேரளாவிற்கு நிவாரண பொருட்கள் அனுப்ப பல்வேறு தரப்பினரும் ஆர்வம் காட்டி வருவதால் அனைத்து பெரு நகரங்களிலும் அரிசி, மளிகை, ஆடைகள் விற்பனை அதிகரித்துள்ளாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

கேரளத்தில் கடந்த வாரம் பேய் மழை பெய்ததால் மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. கேளராவின் 14 மாவட்டங்களில் 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

50 ஆயிரத்திற்கும் அதிகமாக வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. 10 ஆயிரம் கீ.மீ நீளம் சாலைகள் சேதமடைந்தன. ஆயிரக்கணக்கான வீடுகள் மண்சரிவில் தரைமட்டமாயின. வீடுகளை இழந்தவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்தை எட்டியுள்ளது.

இவர்கள் எல்லோரும் அரசு நிவார்ண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தற்போது படிப்படியாக வீடுகளுக்கு திரும்புகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பல்ேவறு தரப்பினரும் நிவாரண பொருட்களை கேரளாவுக்கு அனுப்பிய வண்ணம் உள்ளனர்.

குறிப்பாக ஒரு மாவட்டத்தில் அந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் கோடிக்கணக்கில் அரிசி, ஆடைகள், மளிகை சாமான்கள், குடிநீர் பாட்டில்கள், சோப்புகள், பிஸ்கெட் உள்ளிட்ட அனைத்து விதமான பொருட்களும் சேகரித்து அனுப்புகின்றனர்.

இதேபோல் அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள், மாணவர்கள், உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் தங்களால் முடிந்த அளவிற்கு பொருட்களை கடைகளில் வாங்கி வெள்ள நிவாரனத்திற்கு அனுப்புகின்றனர்.

இதனால் அனைத்து மாவட்டங்களிலும் அரசி, ஆடைகள் உள்ளிட்ட பல பொருட்களின் விற்பனை வழக்கதைவிட கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வர்த்தகர்கள் கூறியதாவது: அரசு நிர்வாகம், அனைத்து அரசியல் கட்சிகள், பொது நல அமைப்புகள் என பல தரப்பினர் எங்களிடம் கேரளாவின் வெள்ள நிவாரணத்திற்கான பொருட்கள் வாங்குகிறார்கள்.

இதனால் நாங்கள் முழு லாபம் வைக்காமல் குைறந்த விலைக்கு ெபாருட்களை விற்பனை செய்கிறோம். இதனால் விற்பனை அதிகரித்துள்ளது. குறிப்பாக அரிசி மூட்டைகள், மளிகை பொருட்கள், போர்வைகள் விற்பனை உச்சத்தை எட்டியுள்ளது.

அரசியல் கட்சி, மாவட்ட நிர்வாத்தில் இருந்து வருவோர்கள் 50 மூட்டை, 100 மூட்டை என அரிசி வாங்குகின்றனர். இதேபோல் பொதுநல அமைப்புகள் அவர்களின் வசதிக்கு ஏற்றார்போல் பொருட்கள் வாங்குகின்றனர். இதனால் விற்பனை கடந்த வாரத்தில் இருந்து வழக்கத்தை விட அதிகரித்துள்ளது.

இன்னும் தொடர்ந்து கேரளவிற்கு வெள்ள நிவாரண பொருட்கள் வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் வந்துகொண்டு தான் இருக்கின்றனர்.இதனால் இந்த விற்பனை இன்னும் சில நாட்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்றனர்.

Previous Post

மழைக்காலம் துவங்க உள்ளதால் செங்கல் விலை உயர்வு

Next Post

நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக குறுமிளகு விவசாயம் பாதிப்பு

Next Post

நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக குறுமிளகு விவசாயம் பாதிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures