வெள்ளவத்தைஇ கொள்ளுப்பிட்டிய பிரதேசங்களுக்கு இடையில் கரையோரப் பாதையில் போக்குவரத்து நடவடிக்கைகள் இன்றைய தினம் வரையறுக்கப்படும் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.
2018 தேசிய சம்பியன்சிப் சைக்கிளோட்டப் போட்டி காரணமாக இன்று காலை 7.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை இந்தப் பாதையில் போக்குவரத்து வரையறுக்கப்பட்டிருக்கும். இந்தக் காலப்பகுதியில் முடிந்தளவு மாற்றுப் பாதைகளை பயன்படுத்துமாறு பொலிசார் சாரதிகளைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

