அங்கமுவ நீர்த்தேக்க வான்கதவுகள் இரண்டு திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
இதனால் புத்தளம் – மன்னார் (பழைய மன்னார் வீதி) வீதியில் எழுவன்குளம் பகுதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு சாரதிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.