முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க வெளிநாட்டில் குடியேற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவாக சந்திரிக்கா செயற்பட்டிருந்தார்.
அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைத்துக்கொண்ட விவகாரத்திலும் கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வந்தார்.
இந்தநிலையில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்திருந்தார்.
இதன்காரணமாக அரசியல் செயற்பாடுகளிலிருந்து விலகி வெளிநாட்டில் குடியேற சந்திரிகா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

