வெல்லவாய தென்னமலுவ வனப் பகுதியில் ஏற்பட்ட தீ பரவலில் 100 ஏக்கர் வரையிலான நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
பிரதேச மக்களினால் இராணுவத்தினருக்கு வழங்கிய தகவலையடுத்து தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டனர்.