முள்ளிவாய்க்கால் படுகொலையின் 10ஆம் ஆண்டை நினைவுகூரும் முகமாக கிளிநொச்சியில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அத்தோடு மக்கள் நடமாற்றமின்றி கிளிநொச்சி வெறிச்சோடிக் காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இறுதி யுத்தத்தில் உயிரிழந்த ஈழத்தமிழர்களை நினைவுகூரும் வகையில் முள்ளிவாய்க்காலில் இன்று நினைவுகூரல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
இதனை முன்னிட்டே கிளிநொச்சி நகர், சேவை சந்தைகள் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
முள்ளிவாய்க்கால் நினைவுகூரலை உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கும் வகையில் இவ்வாறு கடைகள் அடைக்கப்பட்டு வர்த்தகர்களும் தமது ஆதரவினை வழங்கியுள்ளனர்.