வெடி மருந்து (டைனமைட்) பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 88 கிலோ கிராம் மீன்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மத்திய கடற்படை கட்டளையுடன் இணைந்து கடற்படை வீரர்கள் மன்னார், சவுத்பார் பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனையின் போது இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்தேகநபர் 47 வயதுடைய மன்னார், சவுத்பார் பகுதியில் வசிப்பவர் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட நபர், மீன்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் துணை மீன்வள ஆய்வாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

