வெசாக் தினத்தை முன்னிட்டு மக்களின் போக்குவரத்து சிரமத்தை குறைப்பதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, வழமைக்கு மாற்றமாக மேலதிக ரயில்களை சேவையில் ஈடுபடுத்த திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளது.
இன்று (30) முதல் இந்த விசேட ரயில் சேவை நடைமுறைக்கு வருவதாகவும் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.