வீதி விபத்துக்கள் 30 வீதத்தால் அதிகரிப்பு

நாட்டில் வீதி விபத்துக்களால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்து பிரிவு பணிப்பாளர் வைத்தியர்  இந்திக ஜாகொட தெரிவித்தார்.

கடந்த வருடத்தில் வீதி விபத்துக்களால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை  413 ஆக பதிவாகியிருந்த நிலையில், தற்போது 588 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் டிசம்பர் 24, 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் மொத்தம் 588 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளன.

கடந்த வருடத்துடன்  ஒப்பிடுகையில் இவ் வருடத்தில் 30 வீதத்தால் விபத்துக்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் நாட்டில் சிகிச்சை பெற்ற நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகத்து  காணப்படுகின்றது.  கடந்த ஆண்டில்  உள்நாட்டில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் எண்ணிக்கை  210 ஆக பதிவாகியிருந்த நிலையில் இந்த ஆண்டு 311 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் இவ் விபத்துகளில் 80 சதவீதம் வீதி விபத்துக்களால் ஏற்படுகின்றன. எனவே, வீதி மற்றும் ஏனைய விபத்துக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக பண்டிகைக் காலம் இன்னும் நிறைவடையாததால், மக்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறு  வைத்தியர் இந்திக ஜாகொட வலியுறுத்தியுள்ளார்.

பண்டிகை காலங்களில் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் விபத்துகள் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது பாராட்டத்தக்கது என்றும் கூறினார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *