ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் விழுந்து கிடந்த பணம் மற்றும் நகையை அதன் உரிமையாளரை தேடிச் சென்று சாரதி ஒருவர் ஒப்படைத்துள்ளார்.
6 பவுன் பெறுமதி தங்க நகை மற்றும் 27300 ரூபாய் பணம் என்பன உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஆர்.ஏ. நிஷ்ஷங்க என்ற முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் வீதியில் விழுந்து கிடத்த பெண்களின் கைப்பை ஒன்றை அவதானித்துள்ளார்.
அதனை சோதனையிட்ட போது பெறுமதியான தங்க நகை மற்றும் பணம் என்பன அதில் இருந்துள்ளன.
பையில் இருந்த தடுப்பூசி அட்டையில் குறிப்பிடப்பட்டிருந்த தொலைபேசி இலகத்திற்கு அழைப்பு மேற்கொண்டு உரிமையாளரிடம் தவறவிட்ட பணப்பையை ஒப்படுத்துள்ளார்.
தங்க நகை உரிமையாளரான பெண் முச்சக்கர வண்டி சாரதியின் செயற்பாட்டிற்கு நன்றி தெரிவிப்பதற்காக ஹட்டன் பிரதேசத்தில் உள்ள அவரின் வீட்டிற்கு நேற்று சென்றுள்ளார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]