உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் வடக்கில் ஆட்சி அமைப்பதில் தொங்கு நிலமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சபைகளைக் கைப்பற்றியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோ ஈ.பி.டி.பியுடன் கூட்டுச் சேருவதில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளன என்று அறிய முடிகின்றது.
ஈ.பி.டி.பியுடன் கூட்டுச் சேருவதன் ஊடாக சில சபைகளில், இரு கட்சிகளும் ஆட்சி அமைப்பதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. ஆனாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் எந்தக் காரணத்துக்காகவும் ஈ.பி.டி.பியுடன் சேருவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளன என்று தெரியவருகின்றது.
ஈ.பி.டி.பியுடன் கூட்டமைப்பின் பிரமுகர்கள் பேச்சு நடத்தியுள்ளனர் என்று செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அப்படி எந்தப் பேச்சும் நடத்தவில்லை. ஆட்சி அமைப்பதற்காக யாருடனும் பேசப்போவதில்லை. கூடுதலான ஆசனங்களைப் பெற்றவர்கள் ஆட்சி அமைக்கவேண்டும். மற்றையவர்கள் அதனைக் குழப்பக் கூடாது, இதுதான் கட்சியின் நிலைப்பாடு என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட்டாரங்கள் தெரிவித்தன.