வீட்டொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி திடீரெனத் தீப்பற்றி எரிந்தது.
அதில் முச்சக்கர வண்டி முற்றாகச் சேதமடைந்தது எனத் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் அட்டாளைச்சேனை 8ஆம் பிரிவின் ஹாஜியார் வீதியி லுள்ள வீடொன்றில் இடம்பெற்றது.
தீ ஏற்பட்ட வேளையில் இரு சிறுவர்கள் மாத்திரமே வீட்டில் இருந்துள்ளனர். வீதியால் சென்றவர்கள் முச்சக்கர வண்டி தீப்பற்றிய தைக் கண்டனர். உடனே சத்தமிட்டு அயலவர்களையும் அழைத்து தீயை அணைக்க முற்பட்டனர்.
எனினும் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை அயலவர்கள் வருவதற்குள் முச்சக்கர வண்டி தீயில் கருகியது. வீட்டின் மின்மானி யிலும் தீ பரவியது.
மின்சார சபையின் ஊழியர்கள், சம்பவ இடத்துக்கு உடன் விரைந்து மின்சாரத் தைத் துண்டித்து, பாதுகாப்பு வழங்கினர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

