5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த், சின்கியூபீல்டு கோப்பைக்கான செஸ் தொடரில் 5-வது சுற்றில் வெற்றி பெற்றார். அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் முதல் நான்கு சுற்றுகளையும் டிரா செய்திருந்தார். இந்நிலையில் 5-வது சுற்றில் ஆனந்த், 2-ம் நிலை வீரரான பேபியானோ கருணாவை எதிர்த்து விளையாடினார். இதில் 29-வது நகர்த்தலின் போது ஆனந்த் வெற்றி பெற்றார்.
இதன் மூலம் 3 புள்ளிகளுடன் அவர் 2-வது இடத்துக்கு முன்னேறினார். இன்னும் 4 சுற்றுகள் உள்ள நிலையில் பிரான்சின் வாச்சியர் லாக்வேவ் (3.5) முதலிடத்தில் உள்ளார்.