நடிகர் விஷாலுக்கு படங்களை பொறுத்தவரை மார்க்கெட் குறைவு என்றாலும் நடிகர் சங்கத்தில் அவரது நடவடிக்கையால் முன்னேற்றமே தொடர்ந்து காணப்படுகிறது.
நடிகர் சங்க நிலத்தை மீட்டு, சொன்னது போல கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழாவையும் நடத்திவிட்டார். தற்போது தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் ஆகிவிட்டார். தயாரிப்பாளர் சங்கத்தை பொறுத்தவரை இதுவரை ஒரு குறிப்பிட்டவர்களே மாறி மாறி ஆட்சி செய்து வந்தனர்.
இதில் பல தயாரிப்பாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகவே இருந்தது. சிறு படங்களுக்கும் தியேட்டர் கிடைக்காமல் போவது, படங்களுக்கு அரசு மானியம் கிடைக்காமல் போவது, நடிகர், நடிகைகள் கோடிக்கணக்கில் சம்பளம் கேட்பது, கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு இடையேயான பிரச்சனை என பல சிக்கல்கள் உள்ளது.
மேலும் வாடகை இடத்தில் நடத்தப்பட்டு வரும் தயாரிப்பாளர் சங்கத்திற்கு தனி இடம் அமைத்தல், படங்கள் திருட்டு விசிடி ஒழிப்பு, சினிமா, சீரியல், விளம்பரம், வர்த்தகம் என ஒப்பந்தங்கள் முறைப்படுத்துதல் என பல பணிகள் இருக்கிறது.
2 வருடத்தில் விஷால் இதையெல்லாம் சரிப்படுத்துவாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

