விற்பனையாகாமல் தேங்கிப் போன கிறிஸ்துமஸ் மரங்களை ரஷ்ய விலங்கியல் காட்சி சாலை உணவுப் பொருளாக மாற்றி உள்ளது.
அந்நாட்டின் மாஸ்கோ நகரில் உள்ள விலங்கு காட்சி சாலையில், விலங்குகளுக்கு கிறிஸ்துமஸ் மரங்களை வாங்கி அதிகாரிகள் கொடுத்து வருகின்றன. மனித குரங்குகள், மலையாடுகளுக்கு கிறிஸ்துமஸ் மரங்கள் உணவாக மாறி உள்ளன.
ஆனால், பனிக்கரடிகள், யானைகள் போன்றவற்றுக்கு அவை வெறும் விளையாட்டு பொருளாகி உள்ளன. கிறிஸ்துமஸ் மரங்களை விட பிஸ்கட்டுகள், ரொட்டிகள், கேரட்டுகளையே யானைகள் விரும்பி உண்கின்றன. கிறிஸ்துமஸ் முடிந்த பின்னர் வீணாகும், மரங்களை விலங்குகளுக்கு உணவாக பயன்படுத்துவதை ரஷ்ய சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.