Samsung Galaxy Note 8 மொபைல்களின் சிறப்பம்சங்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.
6.2 இன்ச் கொண்ட டிஸ்ப்ளே 18:5:9 என்ற விகிதத்தில் வழங்கப்பட்டுள்ளது. இந்த வசதி ஸ்மார்ட்போனினை ஒற்றை கையில் பயன்படுத்த உகந்ததாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் சாம்சங் வெளியிட்ட கேலக்ஸி S8 மற்றும் கேலக்ஸி S8 பிளஸ் ஸ்மார்ட்போன்களை போன்றே நோட் 8 ஸ்மார்ட்போன்களும் இரு மாடல்களில் வெளியிடப்படலாம் என்றும் கேலக்ஸி நோட் 8 ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இத்துடன் கைரேகை ஸ்கேனர் டிஸ்ப்ளேவினுள் பொருத்தப்படலாம் என்றும் டூயல் கமெரா அமைப்பு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.
முன்னதாக வெளியான தகவல்களில் ஐரிஸ் ஸ்கேனர், பிக்ஸ்பி ஏ.ஐ. பட்டன் உள்ளிட்டவற்றுடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் ஒரு மாடலிலும், மற்றொரு மாடலில் எக்சைனோஸ் 9810 பிராசஸர் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
கேலக்ஸி நோட் 8 ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புகைப்படங்களை எடுக்க 12 MB, ஆங்கிள் பிரைமரி கேமரா, 13 MB, டெலிபோட்டோ லென்ஸ் மற்றும் 3X ஆப்டிக்கல் சூம் வசதி கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. செல்ஃபிக்களை எடுக்கவும் இரட்டை கமெரா அமைப்பு வழங்கப்படலாம்.
மேலும் இத்துடன் நோட் 8 ஸ்மார்ட்போனில் வாட்டர் மற்றும் டஸ்ட் ப்ரூஃப் வசதிகளைக் கொண்டிருக்கும் இந்த புதிய கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் வரும் ஆகஸ்டு அல்லது செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.