ஆப்கானிஸ்தானின் முன்னாள் சக்கரநாற்காலி கூடைப்பந்தாட்ட மகளிர் அணியின் தலைவர் நிலோபர் பயட் தலிபான் பல்கலைகழகங்களில் பெண்கள் கல்வி கற்பதற்கு அனுமதி மறுத்துள்ளதை பேரழிவு என வர்ணித்துள்ளார்.
ஆப்கானில் இரண்டு தடவையும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவரான இவர் அடுத்த கட்டமாக பெண்கள் சுவாசிப்பதற்கும் உயிர்வாழ்வதற்கும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
தலிபான் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய பின்னர் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியுள்ள நிலோபர் ஏஎன்ஐக்கு வழங்கிய பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார்.
துரதிஸ்டவசமாக தலிபான் பெண்கள் பல்கலைகழகங்களிற்குள் செல்வதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிவித்துள்ளது,பெண்களால் பல்கலைகழகத்திற்குள் நுழைய முடியவில்லை என்பதை நாங்கள் பார்த்தோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாணவிகளிற்கு பாடசாலைகள் மூடப்பட்டு ஒன்றரை வருடங்களாகின்றன தற்போது பல்கலைகழகங்களிற்கு செல்வதற்கு பெண்களிற்கு அனுமதி மறுக்கப்படுவதற்கான தருணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது பேரழிவு இத்தகைய கட்டுப்பாடுகள் மூலம் அவர்கள் பெண்கள் மீது கட்டுப்பாடுகளை விதித்து அழுத்தங்களை பிரயோகிப்பதை நாங்கள் பார்க்கின்றோம் எனவும் ஆப்கானிஸ்தானின் முன்னாள் சக்கரநாற்காலி கூடைப்பந்தாட்ட மகளிர் அணியின் தலைவர் நிலோபர் பயட் தெரிவித்துள்ளார்.
ஆப்கானில் பெண்கள் குறித்த தலிபானின் அடுத்த திட்டம் அவர்கள் சுவாசிப்பதற்கு அனுமதி மறுப்பதாக காணப்படும் அதன் பின்னர் அடுத்த திட்டம் அவர்கள் வாழ்வதற்கு அனுமதி மறுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளாhர்.ஏனென்றால் ஒவ்வொரு நாளும் அவர்கள் புதிய கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தலிபான் ஒருபோதும் மாறாது என்பது எங்களிற்கு தெரியும் உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் அவர்கள் மாறாமாட்டார்கள் என்பதை அறிந்துள்ளனர்,அவர்கள் 25 வருடங்களிற்கு முன்னர் காணப்பட்ட அதே பயங்கரவாதிகள் தான் தற்போதும் உள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
முதல் தடவை அவர்கள் ஆப்கானிஸ்தான் வந்தவேளை நாட்டை அழித்து ஆயிரக்கணக்கனாவர்களை கொலை செய்தனர் எனது நடவடிக்கைகளால் எனக்கு ஆபத்து என்பதால் தலிபான் வந்தவேளை நான் அங்கிருந்து வெளியேறினேன் எனவும் நிலோபர் பயட் தெரிவித்துள்ளார்.
நான் தலிபானிற்கு ஆற்றிய உரைகள் காரணமாகவும் நான் பெண் என்பதாலும் நான் தொடர்ந்தும் அங்கு இருப்பது பாதுகாப்பானதாக தெரியவில்லை,கடந்த ஒரு வருட காலமாக நான் வீடு இல்லாமல் வாழ்கின்றேன் அனைத்தையும் துறந்து எனது உயிரை மாத்திரம் காப்பாற்றினேன்.
1990 இல் தலிபான் அதிகாரத்தை கைப்பற்றியவேளை -பயட்டிற்கு இரண்டு வயது அவரது வீட்டை ரொக்கட் ஒன்று தாக்கியது -தாக்குதலில் அவரது சகோதரர் ஒருவர் கொல்லப்பட்டார்,அவரது தந்தை காயமடைந்தார்- பயட்டின் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டது,அவர் காலை இழந்தார்.