வெகுவிரைவில் அரசாங்கமொன்றை ஸ்தாபிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை அலரிமாளிகையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு முன்னர் பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டுமா என ஊடகவியலாளர்கள் அவரிடம் வினவியமைக்கு,
இல்லை, பிரதமர் ஒருவர் இல்லாமல் பாராளுமன்றம் கூட முடியும். அதன்படியே, கடந்த 14, 15, 16 ஆம் திகதிகளில் பாராளுமன்ற அமர்வு கூடியது. இதன்படி, திங்கட்கிழமையும் அமர்வு கூடலாம். எனினும், எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் ஜனாதிபதி பிரதமர் ஒருவரையும் புதிய அமைச்சரவையையும் நியமிப்பார் என நான் எதிர்பார்க்கின்றேன். அவ்வாறு ஜனாதிபதி செயற்படவில்லை எனில், அது நாட்டு மக்களுக்கு இழைக்கும் அசாதாரணமாகும். அத்துடன், ஜனாதிபதியுடன் நாம் கைக்கோர்ப்பாமானால், எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதித் தேர்தலை உத்தியோகபூர்வமாக நடாத்த முடியும். ஆகவே, ஜனவரி மாதம் 8 ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதித் தேர்தலுக்கு செல்லவும் நாம் தயாராகவுள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா பதிலளித்துள்ளார்.

