தமிழ்த் தின விழா போட்டியில் கிழக்கு தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான நாட்டுக்கூத்து பாடசாலை மட்டங்களில் குறிப்பாக அகில இலங்கை தமிழ் தின விழாப்போட்டியில் நீண்ட காலமாக நடைமுறையில் இருந்தது.
பாடசாலை மட்டம், கோட்ட மட்டம், வலய மட்டம், மாகாண மட்டம் வரை மாணவர்கள் பங்கு பற்றினார்கள். அதில் கிடைக்கப்பெறும் சான்றிதழ்கள் மாணவர்களுக்கு உயர்கல்வியை பெறவதற்கு உறுதுணையாக இருந்தது.
ஆனால் நீண்ட காலம் நடைமுறையில் இருந்து வந்த நாட்டுக் கூத்து 2015 முதல் கிழக்கு மாகாண தமிழ் தின போட்டியில் இருந்து நீக்கப்பட்டது.
நாட்டுக்கூத்து போட்டி மீண்டும் தமிழ் தின போட்டியில் இடம் பெற வேண்டும் என்றும், நாட்டாரியல் கலைஞர்கள் கௌரவிக்கபட வேண்டும் என்றும் தொடர்சியாக குரல் கொடுத்து வந்த பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் கடந்த 30 .01. 2019 கௌரவ கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்தில் கௌரவ எம். எல். ஏ. எம். கிஸ்புல்லா அவர்களிடம் இது தொடர்பாக தமிழ் தின போட்டியில் இருந்து நீக்கபட்ட நாட்டுக்கூத்து இவ்வருடத்தில் இருந்தே சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்ற எழுத்து மூல கோரிக்கையை முன் வைத்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சதாசிவம் வியாழேந்திரன். கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கௌரவ ஆளுனர் உடனடியாக கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளரை அழைத்து உடனடி நடவடிக்கையினை மேற்கொண்டு இவ்வருடத்தில் இருந்தே நாட்டுக்கூத்து தமிழ் தின போட்டிகளில் இடம்பெற வேண்டும் என பணித்தார்.
இக் கலந்துரையாடலில் கிழக்கு மாகாண பணிப்பாளர்கள், மாகாண அமைச்சின் செயலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். இச்சந்தர்ப்பத்தில் மேலும் இரண்டு கோரிக்கைகளை எழுத்து மூலம் முன் வைத்தார் பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன்.
01. கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ்ப் பாடசாலைகள் பாடசாலை நடைபெறும் நாட்களில் தினமும் தமிழ் மொழி வாழ்த்துடன் ஆரம்பிக்கப்பட வேண்டும் .
02. கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மாணவர்கள் கல்வி பயிலும் பாடசாலைகளில் பாடசாலை வார இறுதி நாளான வெள்ளிக்கிழமையில் தமிழர் கலாசார சீருடையுடன் மாணவர்கள் வருதல். இத்தகைய கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

