ஹிந்தியில் ஒளிபரப்பான BiggBoss நிகழ்ச்சியின் குறிப்பிட்ட சீசனில் கலந்து கொண்டவர் நடிகர் நிராஹ். இவர் லண்டனில் நடக்கும் போஜ்பூரி பட விருது விழாவில் கலந்து கொள்வதற்காக விமானத்தில் பயணம் செய்திருக்கிறார்.
அப்போது அவர் விமான பணிப்பெண்ணிடம் தகாத முறையில் நடந்திருக்கிறார். இதைப்பார்த்த சக பயணிகள் அவரை கண்டித்துள்ளனர். ஆனாலும் அவர் தொடர்ந்து அந்த பெண்ணை கஷ்டப்படுத்தியதால் விமான உயர் அதிகாரி நீங்கள் இப்போது மன்னிப்பு கேட்கவில்லை என்றால் லண்டன் போலீசாரிடம் அந்த பெண் புகார் கொடுப்பார் என்று கூறியுள்ளார்.
பின் நிராஹ் அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். நடிகர் விமானத்தில் ஏன் அப்படி நடந்து கொண்டார் என்று விசாரித்ததில் அவர் மது அருந்தியிருப்பது தெரியவந்துள்ளது.