அமைச்சர்கள் உட்பட விசேட அனுமதி பெற்றுள்ள எவரும் விமான நிலையத்தில் ஒதுக்கப்பட்டுள்ள விசெட அதிதிகளுக்கான வாயிலைப் பயன்படுத்துவதாயின் இதன்பிறகு 1000 டொலர்கள் செலுத்த வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ஆலோசனையின் பேரில் இதற்கான விசேட சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி உட்பட சகல அமைச்சர்களுக்கும் இந்த சட்டம் பொதுவானது எனவும் அவர் கூறியுள்ளார். இவர்கள் அனைவரும் வெளிநாட்டுப் பயணத்தின் போது சாதாரணமாக பொதுமக்கள் பயன்படுத்தும் வழிமுறையைப் பின்பற்ற வேண்டும் எனவும் கேட்கப்பட்டுள்ளனர்.
அவ்வாறில்லாது பயன்படுத்துவதாயின் அதற்குரிய கட்டணத்தைச் செலுத்தி விட்டு பயன்படுத்தலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, வெளிநாடுகளிலிருந்து இந்நாட்டுக்கு வரும் விசேட அதிதிகளுக்கு இந்தச் சட்டம் அமுல்படுத்தப்படாது எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

