வாகன விபத்து ஒன்றில் படுகாயமடைந்த மட்டக்களப்பு தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் பயணித்த வாகனம் களுவாங்சிக்குடி பிரதேச செயலகத்துக்கு அருகில் கார் ஒன்றுடன் இன்று(14) பிற்பகல் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் நாடாளுமன்ற உறுப்பினரது கை தோள்பட்டையை விட்டு விலகி படுகாயமடைந்த நிலையில் நோயாளர் காவு வண்டியின் மூலமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை இடம்பெற்றுவருவதாக கூறப்படுகிறது.
மேலதிக விசாரணை
அம்பாறை ஆலையடிவேம்பில் இடம்பெற்ற தமிழரசுகட்சியின் மத்தியகுழு கூட்டத்திற்கு சம்பவதினமான இன்று காலை கலந்து கொண்டுவிட்டு மட்டக்களப்பை நோக்கி பிற்பகல் 4.00 மணியளவில் வாகனத்தில் பிரயாணித்துக் கொண்டிருந்தபோதே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.