60 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற ஈரான் விமானம் நடுவானில் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது. இதில் 66 பயணிகள் உயிரிழந்திருப்பதாக விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.
டெஹ்ரானில் இருந்து யஸ்சூஜ் என்ற பகுதிக்கு விமானம் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்திருப்பதாக முதல் கட்ட தகவல் தெரிவிக்கிறது. மேலும் உயிர்ப்பலி அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.