பதுளை, பசறை பகுதியில் இன்று மாலை ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் பேருந்து சாரதி உள்ளிட்ட 50இற்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்த நிலையில் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில், 20இற்கும் மேற்பட்டோர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
விபத்தில் படுகாயமடைந்த பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

