விடுதலைப்புலிகளை காட்டி கொடுத்த அனைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ளவர்கள்தான் என கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் (Karuna Amman) தெரிவித்துள்ளார்.runa
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “நாங்கள் போராடும் காலத்தில் காட்டி கொடுத்த அணைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள்தான் இன்னும் இருக்கின்றனர்.
ஆனால், யாழ்ப்பாணத்தில் (Jaffna) இருக்கும் யாரும் அவர்களை பார்த்து துரோகி என்று ஒரு போதும் கூற மாட்டார்கள்.
அதில் சித்தார்த்தனும் முக்கியமான ஒரு நபர்தான், நாங்கள் போராடுவதற்கு விடுதலைப் போராளிகளாகத்தான் சென்றோம் ஆனால் விடுதலைப் போராளிகளாக சென்ற நாங்கள் பயங்கரவாதிகளாக மாற்றப்பட்டோம்” என அவர் தெரிவித்துள்ளார்.