பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷவும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவின் தலைமையிலான கொக்கேன் விசாரணைக் குழுவுக்கு அழைக்கப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியில் முன்னர் இருந்த இரு எம்.பி.க்கள் இந்த கொக்கேன் பயன்படுத்தும் பட்டியலில் உள்ளனர். சிலருடைய வீடியோ காட்சிகளும் தன்னிடம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குழு முன்னிலையில் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கையில், கூட்டு எதிரணியிலுள்ள 14 பேரும், ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள 5 பேரும், விமல் வீரவங்சவின் கட்சியில் உள்ள இருவரும் காணப்படுவதாகவும் ரஞ்ஜன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.