இராஜினாமா செய்த முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு நாளை வழங்கப்படவுள்ள அமைச்சு நியமனத்தின் போது அமைச்சொன்றை வழங்க கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
இது தொடர்பில் கடந்த வாரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் விஜேதாச ராஜபக்ஷ எம்.பி. இற்கும் இடையில் இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
விஜேதாச ராஜபக்ஷ, நல்லாட்சி அரசாங்கத்தின் ஆரம்பத்தில் நீதி மற்றும் புத்தசாசன அமைச்சராக கடமையாற்றினார். நல்லாட்சி அரசாங்கத்திற்குள்ளேயே உள்ள அமைச்சர்கள் சிலரினால் இவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை கொண்டு வர பிரயத்தனங்கள் எடுக்கப்படும் போது இவராக முன்வந்து தனது பதவியை இராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.