வீடியோ காலில் விஜய் பேசுவது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுதான் தளபதி 66 கெட் அப்பா என ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.கதை, திரைக்கதையில் சறுக்கல் ஏற்பட்டாலும் விஜய் என்ற ஒற்றை மனிதர் பீஸ்ட் படத்தை வெற்றிப்படமாக மாற்றியுள்ளார். ரசிகர்களால் மிக மிக எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் வர்த்தக ரீதியில் வெற்றி பெற்றாலும், ரசிகர்களை திருப்திபடுத்தவில்லை.விஜய்யின் கேரக்டர் குறித்தும், திரைக்கதை தொடர்பாகவும் இயக்குனர் நெல்சன் இன்னும் ரிசர்ச் செய்திருக்கலாம் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் ரசிகர்களின் பார்வை தற்போது தெலுங்கு டாப் இயக்குனர் வம்சி இயக்கும் தளபதி 66 படத்தின் பக்கம் திரும்பியுள்ளது.
இந்த படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, சரத் குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஷாம், யோகி பாபு உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். நீண்ட காலத்திற்கு பிறகு விஜய் குடும்பக் கதையில் நடிப்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.சமீபத்தில் விஜய் ஐதராபாத் சென்றதும், காரில் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்ற புகைப்படங்களும் வைரலானது.
இந்நிலையில் விஜய் வீடியோ கால் பேசும் ஸ்க்ரீன் ஷாட் போட்டோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. இதுதான் விஜய்யின் கெட்அப் இதுதானா என ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.
Thalapathy recent Clicks 🤩❤️ #Thalapathy66 @actorvijay pic.twitter.com/dF6Z1fDPxp
— Varisu Fan Page (@VarisuFilmOff) May 10, 2022