இந்நிலையில், சாய் பல்லவி தற்போது நானி ஜோடியாக `ஃபிடா’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து, ஏ.எல்.விஜய் இயக்கத்தில் `கரு’ என்ற புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக உள்ள இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 5 மணிக்கு வெளியிடப்படுகிறது. அந்த போஸ்டரை இயக்குநரும், நடிகருமான பிரபுதேவா வெளியிடுகிறார். `தேவி’ படத்தின் மூலம் பிரபுதேவா – ஏ.எல்.விஜய் நெருங்கிய நண்பர்களாகி இருக்கின்றனர்.
அதன் காரணமாக ஏ.எல்.விஜய் இயக்கிய `வனமகன்’ படத்தை பிரபுதேவா தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். ஜெயம் ரவி – சாயிஷா நடிப்பில் உருவாகி உள்ள வனமகன் படம் ரம்ஜான் வெளியீடாக வருகிற 23-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.