நடிகர் சத்யராஜ் கடந்த 9 வருடங்களுக்கு முன் காவிரி பிரச்சனையின் போது போராட்டத்தில் கன்னடர்கள் குறித்து தன்னுடைய கருத்தை வெளியிட்டிருந்தார். தற்போது பாகுபலி 2 படம் வெளியாக இருக்கும் நிலையில் சத்யராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும் என கன்னட அமைப்புகள் சில எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
சத்யராஜ் இன்று அதற்கு தான் வருத்தம் தெரிவிப்பதாக ஒரு வீடியோவையும் வெளியிட்டார். மேலும் தற்போது விஜய்யின் பெயரில் டிவிட்டரில் யாரோ ஒரு சிலர் கன்னடர்களை எச்சரிக்கிறேன். சத்யராஜ் எனக்கு தந்தை போன்றவர். மன்னிப்புக்கு பதிலாக மண்ணை அள்ளி தின்னுங்கள் என பதிவிட்டுள்ளனர்.
இந்த போலி டிவீட்டால் கர்நாடகாவில் சில சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. விஜய் தற்போது விஜய் விஜய் 61 படத்தில் பிசியாக உள்ளார். மேலும் அவர் ட்வீட்டரில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மட்டுமே கடைசியாக ட்வீட் போட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.