முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை கைது செய்ய பணிப்புரை விடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனை வலியுறுத்தி சிங்கள ராவய அமைப்பு அரசதலைவர் செயலகத்துக்கு கடிதம் ஒன்றை கையளித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்தக் கடிதம் அந்த அமைப்பின் பொது செயலாளர் மாகல்கந்தே சுதத்த தேரரால் வழங்கப்பட்டுள்ளது.
விஜயகலா மகேஸ்வரனை கைது செய்யுமாறு பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுப்பதற்கான அதிகாரம் அரசதலைவருக்கு உள்ளது.
அதற்கமைய அவரை கைது செய்ய அரசதலைவர் பணிப்புரை விடுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என, சிங்கள ராவய அமைப்பின் பொது செயலாளர் தெரிவித்தார்.

