முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக பிரான்ஸில் எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றதாகக் கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் மீண்டும் வரவேண்டும் என்று விஜயகலா மகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் இரு வாரங்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.
அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பிரான்ஸில் வாழும் இலங்கையர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.பிரான்ஸில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் சில நாள்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்களைச் சந்திக்கச் சென்ற பிரான்ஸ்க்கான இலங்கை தூதர் புத்தி பே அத்தாவுத, ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு வழங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு இலங்கையருக்கும் விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்குவதனை விரும்புவதில்லை எனவும், அதற்கு ஒரு போதும், ஆதரவு வழங்குவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆர்ப்பாட்டத்தின் போது தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்கவிடம் சமர்பிக்குமாறு மனு ஒன்றும் தூதரிடம் கையளிக்கப்பட்டதுஎன்று தகவலில் கூறப்பட்டுள்ளது.

