வெசாக் பண்டிகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இந்த நிலையில், கொழும்பு கோட்டையிலிருந்து விசேட ரயில் போக்குவரத்தும் மேற்கொள்ளப்படவுள்ளதாக ரயில் போக்குவரத்து அதிகாரி விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், விசேட பேருந்து போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் நடவடிக்கைப் பிரிவு பணிப்பாளர் டி. ஏ. சந்திரசிரி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வெசாக் அலங்காரங்களை பார்வையிட வருபவர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு விசேட பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.