கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் சுவிஸ் தூதரக ஊழியர் கானியா பிரன்சிஸ் தொடர்பில் சி.ஐ.டி.யினர் முன்னெடுக்கும் விசாரணை குறித்து கண்டறிய இலங்கைக்கான சுவிஸ் நாட்டின் முன்னாள் தூதுவர்களுள் ஒருவரான ஜோக் பிரீடன் இன்று இலங்கை விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சட்ட மா அதிபரின் ஆலோசனையின் பேரில் இரகசியப் பொலிஸார் இந்த ஊழியரைக் கைது செய்தமை குறித்து சுவிஸ் வெளிவிவகார அமைச்சர் இக்னேசியோ கஸ்ஸிஸ் இலங்கை அரசாங்கம் தொடர்பில் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக சுவீஸ் ஊடகங்கள் குறிப்பிட்டிருந்தன.
சுவீஸ் அரசாங்கத்தினால் இந்நாட்டுக்கு அனுப்பப்படும் முன்னாள் தூதுவர் ஜோக் பிரீடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன ஆகியோரைச் சந்திக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
கடத்தப்பட்டதாக கூறப்படும் தனது ஊழியர் தொடர்பில் இந்நாட்டுக்கான சுவிஸ் தூதுவர் ஹன்ஸ் பீட்டர் மொக் சட்ட மா அதிபரைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

