மத்திய வங்கி முறிமோசடி தொடர்பான விசாரணைகள் இடையூறின்றி தொடரவேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியுள்ளார்.
ஏற்கனவே தமது அரசாங்கத்தின் போது முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இடையூறுகளின் மத்தியில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக அவர் ஆங்கில செய்தித்தாள் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க விசாரணைகளுக்கு தடங்கல்களை ஏற்படுத்தினார். விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினருக்கு எதிராக அவர் நடவடிக்கையை மேற்கொண்டார்.
ஓய்வின் பின்னர் உத்தியோகபூர்வ இல்லத்தை சொந்தமாக்கிய திட்டத்துக்கு அமைச்சரவை அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டமை தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு ஏற்கனவே பதவியில் இருந்த 5 ஜனாதிபதிகள் பதவிக்கு பின்னர் இவ்வாறான நன்மைகளை பெற்றார்கள் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

