Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விக்னேஸ்வரன் தலைமையில் களமிறங்குவோர் விபரம் வெளியானது

November 11, 2018
in News, Politics, World
0

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வடக்கில் முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையிலும் அணியொன்று தேர்தலில் களமிறங்கவுள்ளது. வடக்கின் ஐந்து மாவட்டங்களிற்குமான வேட்பாளர் தெரிவில் முதலமைச்சர் அணி நேற்றிலிருந்து தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

ஶ்ரீலங்காவின் எட்டாவது நாடாளுமன்றம் கடந்த 9 ஆம் திகதி திடீரென கலைக்கப்பட்டது. நாடாளுமன்றம் கலைக்கப்படுவது குறித்த வர்த்த மானியில், அடுத்த தேர்தல் ஜனவரி 5 ஆம் திகதி இடம்பெறுமென்றும், வேட்புமனு தாக்கல்கள் இம்மாதம் 19 ம் திகதியில் இருந்து 26ம் திகதி வரை இடம்பெறுமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தலிற்கான தயார்படுத்தலில் எல்லா கட்சிகளும் இறங்கி விட்டன.முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான அணியும் இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்க தயார்படுத்தலில் இறங்கியுள்ளது. தேர்தலிற்கான வேட்பாளர்களை தெரிவு செய்யும் பணியை நேற்றே அது ஆரம்பித்துவிட்டது.

. சுரேஷ் பிரேமச்சந்திரன், அருந்தவபாலன், அனந்தி சசிதரன், ஐங்கரநேசன் ஆகியோரை யாழ் மாவட்டத்தில் முக்கிய வேட்பாளாக விக்னேஸ்வரன் அணி சார்பில் களமிறங்குவதென நேற்றிரவு முதற்கட்டமாக முடிவாகியுள்ளது. இந்த பட்டியலில் புதிதாக யார் எல்லாம் இணைவார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை.

அதுபோல, வடக்கின் ஏனைய மாவட்டங்களிலும் வேட்பாளர்களை தெரிவு செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

ஈ.பி.ஆர்.எல்.எவ் பதிவுசெய்யப்பட்ட கட்சியாக இருந்தாலும், அந்த கட்சி சின்னத்தில் விக்னேஸ்வரன் அணி களமிறங்கவில்லை. இம்முறை சுயேட்சையாகவே களமிறங்கவுள்ளனர்.

விக்னேஸ்வரன் இம்முறை தேர்தலில் களமிறங்கவில்லை. எனினும், அவரும் களமிறங்க வேண்டுமென அவரது அணிக்குள் அபிப்பிராயம் இருந்து வருகிறது. இது குறித்த இறுதி முடிவு வெளியாக இன்னும் சில காலம் நாட்களாகும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு, விக்னேஸ்வரன் அணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணியென்பன தமிழ் தேசிய வாக்காளர்களை குறிவைத்து போட்டியிடவுள்ளன.

Previous Post

மட்டக்களப்பில் தொடரும் மழை காரணமாக 16,632 குடும்பங்கள் பாதிப்பு

Next Post

நகைகளை கொள்ளையடித்த இராணுவ சிப்பாய் கைது

Next Post
நகைகளை கொள்ளையடித்த இராணுவ சிப்பாய் கைது

நகைகளை கொள்ளையடித்த இராணுவ சிப்பாய் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures