Saturday, September 13, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வாழ்வாதாரம் இழந்த ஆயிரக்கணக்கான கல்லுடைக்கும் தொழிலாளருக்கு விடிவு ;வி. சகாதேவன் உறுதி

July 28, 2020
in News, Politics, World
0

யாழ்ப்பாணத்தில் 80 கல்லுடைக்கும் ஆலைகளின் உரிமையாளர்கள்,5 ஆயிரத்துக்கும் மேற்பட்டதொழிலாளர்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட வேட்பாளர் வினாயகமூர்த்தி சகாதேவன் தெரிவித்துள்ளார் .

நேற்றைய புன்னாலைகட்டுவன் ,ஈவினை பகுதிகளில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட வி . சகாதேவன் குறிப்பிட்ட தொழிலாளர்களின் எதிர்காலம் குறித்து கலந்துரையாடியுள்ளார் .

இது தொடர்பில் கருது தெரிவித்த அவர் சுயாதீனமாக எந்த ஒரு தடையும் இல்லாது முன்னைய காலங்களில் இந்த கல்லுடைத்தல் தொழில் இடம்பெற்றது .கைத்தொழிலாகவும் ,இயந்திர சாதனங்களை வைத்தும் இந்த தொழிலை மக்கள் செய்து விவசாயக்காணிகளை சீர்படுத்தி விவசாய நடவடிக்கைகளை மேற்க்கொண்டனர் .

தற்போது கனியவளங்கள் அகழ்வு சட்டநியதிக்குள் இந்த கல்லகழ்வு உள்ளடக்கப்பட்டுள்ளதால் இந்த தொழிலை வாழ்வாதாரமாக கொண்டவர்களும் ,காணிகளில் கல் அகழ்வை செய்து விவசாயம் செய்ய வேண்டிய விவசாயிகளும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர் .

கல் அகழ்ந்து விவசாயம் செய்யவேண்டிய நிலங்கள் தரிசாக காணப்படுகின்றன ஆகையால் இந்த கல் அகழ்வு செயற்பாட்டை விவசாய சட்டத்துக்குள் கொண்டு வந்து இந்த மக்களுக்கு விமோசனத்தை வழங்க தான் உறுதி வழங்கியிருப்பதோடு ,குறிப்பிட்ட பாதிப்பை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு தன்னால் கையெழுத்து இடப்பட்ட உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் .

Previous Post

115 பேரின் கட்சி உறுப்புரியையை நீக்குவதற்கு ஐக்கிய தேசிய கட்சி தீர்மானம்

Next Post

பொதுத் தேர்தலின் பின்னர் கொரோனா பாதுகாப்பு ; சுகாதார வழிகாட்டல் நாடாளுமன்றத்துக்கு

Next Post

பொதுத் தேர்தலின் பின்னர் கொரோனா பாதுகாப்பு ; சுகாதார வழிகாட்டல் நாடாளுமன்றத்துக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures