வாரிசு
வாரிசு படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. அஜித்தின் துணிவு படமும் இதே நாளில் ரிலீஸ் ஆவதால் தியேட்டர்கள் இரண்டு படங்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது இருக்கிறது. தற்போது இரண்டு படங்களும் ரிலீஸ் ஆகி விமர்சனங்களும் வர தொடங்கிவிட்டது.
துணிவு படத்தை விட வாரிசு படம் தான் பெரிய அளவில் ப்ரீ ரிலீஸ் பிஸ்னஸ் செய்து இருக்கிறது என முன்பே தகவல் வந்தது குறிப்பிடத்தக்கது.
முதல் நாள் வாரிசு வசூல்
இந்நிலையில் தற்போது முதல் நாளில் வாரிசு படம் எவ்வளவு வசூலிக்கும் என கணிக்கப்பட்டு இருக்கிறது.
தமிழ்நாட்டில் மட்டும் வாரிசு படம் முதல் நாளில் 25 கோடி ரூபாய் அளவுக்கு வசூலிக்கும் என கணிக்கப்பட்டு இருக்கிறது. முழு வசூல் விவரம் என்ன என்பது நாளை தான் தெரியவரும்.