இன்றைய தினம் தோன்றும் சுப்பர் மூனை தெளிவாக காண சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுப்பர் மூன் எனப்படும் மிகப்பெரிய நிலாவை அனைவரும் இன்று காண முடியும்.
ஏனைய பௌர்ணமி தினங்களில் தெளிவாக காணப்படும் நிலாவை விட 14 மடங்கு பெரியதும், நூற்றுக்கு 30 வீத அதிக வெளிச்சத்துடனான நிலாவையும் இன்றை தினம் காண முடியும் என வானியல் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனை சுப்பர் மூன் என அழைப்பதாக கொழும்பு பல்லைக்கழக வானியல் ஆராய்ச்சி பிரிவு பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த நிலாவை மிகவும் தெளிவாக பார்ப்பதற்கு சிறந்த சந்தர்ப்பம் ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிலா தோன்றும் நேரத்தில் அல்லது கீழ் நோக்கி செல்லும் நேரத்தில் இன்னும் மிக தெளிவாக இந்த நிலாவை அவதானிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.