முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி மத்திய அரசு சார்பில் 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
.
நாடு முழுவதும் மத்திய அரசு அலுவலகங்களுக்கு நாளை அரைநாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களுக்கும் நாளை பிற்பகலுக்கு மேல் அரைநாள் விடுமுறை அளித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

