கணக்கறிக்கை தொடர்பாக எதிர்க்கட்சி கடுமை யாக விமர்சித்தபோதும் கணக்கறிக்கைக்கு வாக்கெடுப்பை யாரும்கோரததால் இடைக்கால கணக்கறிக்கை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி ஏகமானதாக நிறை வேற்றப்பட்டது.
அரசாங்கத்தின் எதிர்வரும் நான்கு மாதங்களின் செல வீனங்களை கையாள்வதற்காகன இடைக் கால கணக் கறிக்கை பிரேரணையை பிரதமரும் நிதி அமைச்சரு மான மஹிந்த ராஜபக்ஷ் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
அரசாங்கத்தின் செலவீனங்களை கையாள்வதற்காக ஆயிரத்து 900 பில்லியன் ரூபாவை ஒதுக்கிடுவதற்கும், அதற்காக ஆயிரத்து 300 பில்லியன் ரூபா என்ற கடன் வரம்பை அனுமதிப்பதற்குமான இடைக்கால கணக்கறிக்கை முன்வைக்கப்படுவதாகப் பிரதமர் தமது உரையில் குறிப்பிட்டிருந்தார்.
அதனடிப்படையில் குறித்த கணக்கறிக்கை மீதான விவா தம் நேற்றும் இன்றும் இடம்பெற்றது.
விவாதத்தில் எதிர்க்கட்சியினர் கணக்கறிக்கை தொடர்பாக பல்வேறு விமர்சன ரீதியிலான கருத்துக்களை முன் வைத்திருந்தனர்.
இறுதியில் நேற்று மாலை கணக்கறிக்கையை ஏற்றுக்கொள்வதா என சபாநாயகர் கேட்டபோது, ஆளும் கட்சியினர் ஆம் என தெரிவித்து அங்கீகரித்தனர்.
கணக்கறிக்கை தொடர்பாக எதிர்க்கட்சி கடுமையாக விமர்சித்தபோதும் கணக்கறிக்கைக்கு வாக்கெடுப்பை யாரும்கோரததால் வாக்கெடுப்பின்றி இடைக்கால கணக் கறிக்கையை ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது.
அத்துடன், பாராளுமன்றம் அடுத்த மாதம் எட்டாம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.