ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர் இடப்பில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் எதிர்வரும் 19 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.
எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு முன்னர் இது தொடர்பான முறைப்பாடுகளை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியிடம் சமர்ப்பிக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கே.யூ. சந்திரலால் தெரிவித்துள்ளார்.
மின்அஞ்சல் மூலமும் இவற்றை சமர்ப்பிக்க முடியும் எனவும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு, தேர்தல்கள் ஆணைக்குழு தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.