யுத்த காலத்தில் நிகழ்ந்த உயிரிழப்புக்களை விட அண்மைக்காலமாக மாத்தளை மாவட்டத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் அதிகமென மாத்தளை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மாவட்ட இணைப்புக்குழுக் கூட்டத்தின் போது தெரிவித்தார்.
மேற்படி வாகன விபத்துகளோடு தொடரப்பட்ட வழக்குகள் மூலம் 7 இலட்சத்து 3 ஆயிரத்து 20 ரூபாய் தண்டப்பணமாக அறவிடப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்ட அவர், வாகன விபத்துக்களைத் தடுப்பதற்கு பொலிஸார் எத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுத்தாலும் கூட சாரதி களின் உதாசீனம் காரணமாகவே இத்தகைய விபத்துக்கள் இடம் பெறுவதாகவும் அவர் கவலை வெளியிட்டார்.