வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதற்கு அரசாங்கம் இதுவரையில் கொள்கை ரீதியாக எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
டிசம்பரில் வாகன இறக்குமதிக்கு அனுமதியளிப்பதற்கு அரசாங்கம் இதுவரையில் கொள்கை ரீதியாக எந்தவொரு தீர்மானத்தை எடுக்கவில்லை.
மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் வாகன இறக்குமதிக்கு காணப்படுகின்ற தடை நீக்கப்பட வேண்டுமானால் அதற்காக முன்னெடுக்கப்படக் கூடிய நடவடிக்கைகள் எவ்வாறானவையாக அமைய வேண்டும் என்ற யோசனையையே அவர் வெளியிட்டுள்ளார்.
மாறாக வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதற்கு கொள்கை ரீதியாக எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேலும் தெரிவித்தார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]