தென்மராட்சி பிரதேச வளாகப் பகுதிக்குள் வாகனங்கள் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு வளாகத்திற்கு வெளியே வாகனங்களைத் தரித்து விடுவதற்கு பாதுகாப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
பிரதேச செயலக வளாகப் பகுதி விளை நிலமாக மாற்றப்பட்டதையடுத்து சைக்கிள் மோட்டார் சைக்கிள் போன்றவை விடுவதற்காக வளாகத்திற்கு முன்பாக காணப்பட்ட பகுதி அடைக்கப்பட்டுள்ளது.
பிரதேச செயலக வளாகப் பகுதியில் வெற்றிடமாகக் காணப்பட்ட பகுதிகளில் மரக்கறிப் பயிர்களும் மூலிகைச் செடி வகைகளும் நாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

