வவுனியா வைரவப்புளியங்குளம் வீதியில் நேற்று காலை 11.30 மணியளவில் இரு முச்சக்கரவண்டிகளுடன் லொறி மோதி விபத்துக்குள்ளானது.
வவுனியா குட்சைட் வீதியிலிருந்து வைரவப்புளியங்குளம் வீதிக்கு லொறி திரும்ப முற்பட்ட சமயத்தில் திரும்பும் சந்தியில் காற்றுப்போன நிலையில் தரித்து நின்ற முச்சக்கரவண்டி மீது லொறி மோதி விபத்துக்குள்ளானதுடன் வீதியில் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டியின் மீதும் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் இரு முச்சக்கரவண்டிகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் எவ்வித உயிராபத்துக்களும் ஏற்படவில்லை.
லொறியின் பிரேக் செயற்படாமையே இவ் விபத்து காரணமேன ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
