வவுனியா பிரதேச செயலகத்தில் 17 கிராம அலுவலர் வெற்றிடங்கள் காணப்படுவதாக பிரதேச செயலாளர் கா.உதயராசா தெரிவித்துள்ளார்.
வவுனியா பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்ற பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தாhர். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,வவுனியா பிரதேச செயலக பிரிவில் ஆளணிப் பற்றாக்குறை காணப்படுகின்றது. குறிப்பாக எமது பிரதேச செயலகத்தில் 17 கிராம அலுவலர் வெற்றிடம் காணப்படுகின்றது. இந்த ஆளணி நிரபபப்படாமையால் எமது சேவைகளை இலகுவாக செயற்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது. இதனைக் கருத்தில் கொண்டு பரதேச அபிவிருத்திக் குழு இணைத்தலைவர்கள் கிராம அலுவலர் வெற்றிடத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.