வவுனியா நகரசபையின் தலைவராக முதல் இரண்டு வருடங்களுக்கு நாகலிங்கம் சேனாதிராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (15-02-2018) தமிழரசுக்கட்சியின் வவுனியா அலுவலகமான தாயகத்தில் இடம்பெற்ற கட்சி உறுப்பினா்களின் சந்திப்பின்போது இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் கட்சித்தலைவர்கள், நகரசபை மற்றும் பிரதேச சபைகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் கலந்துகொண்டனா்.
இதனடிப்படையில் வவுனியா நகரசபைக்கு தலைவராக முதல் இரண்டு வருடங்களுக்கு சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் தலைவராக செயற்பட்ட நா. சேனாதிராஜாவும் அடுத்த இரண்டு வருடங்களுக்கு முன்னாள் விவசாய போதனாசிரியரான தர்மலிங்கம் பரதலிங்கமும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை நகரசபையின் உபதலைவராக சந்திரகுலசிங்கம் மோகன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.